அறிமுகங்களை எப்படி இடைநிறுத்துவது?
Home (முகப்பு) திரையின் கீழே உள்ள Pause introductions (அறிமுகங்களை இடைநிறுத்து) என்பதைத் தொடுங்கள். அல்லது Settings (அமைப்புகள்) பகுதிக்குச் சென்று, Introductions (அறிமுகங்கள்) என்பதற்கு அருகில் உள்ள Pause (இடைநிறுத்து) என்பதைத் தொடுங்கள். அறிமுகங்களை மீண்டும் இயக்கும் வரை, புதிய சுற்றுகளில் நீங்கள் சேர்க்கப்பட மாட்டீர்கள். உங்கள் சுயவிவரமும் விருப்பங்களும் சேமிக்கப்பட்டிருக்கும். ஏற்கெனவே உள்ள அறிமுகமோ உரையாடலோ வழக்கம்போல் தொடரும்.
இடைநிறுத்துதல்
- Home திரையிலிருந்து: உங்கள் அடுத்த சுற்றுக்குக் கீழே உள்ள Pause introductions என்பதைத் தொடுங்கள்.
- Settings பகுதியிலிருந்து: Profile (சுயவிவரம்) பகுதிக்குச் சென்று, அமைப்புகள் ஐகானைத் தொடுங்கள். பிறகு Getting introductions (அறிமுகங்களைப் பெறுதல்) என்பதற்கு அருகில் உள்ள Pause என்பதைத் தொடுங்கள்.
மீண்டும் தொடங்குதல்
- Home திரையிலிருந்து: Resume introductions (அறிமுகங்களை மீண்டும் தொடங்கு) என்பதைத் தொடுங்கள்.
- Settings பகுதியிலிருந்து: Introductions paused (அறிமுகங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன) என்பதற்கு அருகில் உள்ள Resume (மீண்டும் தொடங்கு) என்பதைத் தொடுங்கள்.
அடுத்த சுற்றிலிருந்து நீங்கள் மீண்டும் சேர்க்கப்படுவீர்கள்.
Steade உங்கள் அறிமுகங்களை இடைநிறுத்தும்போது
இரண்டு சூழல்களில் நாங்களும் உங்கள் அறிமுகங்களை இடைநிறுத்துவோம்:
- ஓர் அறிமுகத்தைத் தவறவிட்டீர்கள். நீங்கள் முடிவெடுப்பதற்கு முன் ஓர் அறிமுகம் முடிந்துவிட்டால், வேறு யாரும் உங்கள் பதிலுக்காகக் காத்திருக்காமல் இருக்க உங்களை இடைநிறுத்துவோம். Home திரையில் Ready to meet someone? (ஒருவரைச் சந்திக்கத் தயாரா?) என்று கேட்கப்படும். மீண்டும் தொடங்க I’m ready (நான் தயார்) என்பதைத் தொடுங்கள்.
- நீங்கள் ஒருவரைச் சந்தித்துவிட்டீர்கள். ஓர் உரையாடலை முடிக்கும்போது We’re seeing each other (நாங்கள் பழகி வருகிறோம்) என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்த உங்கள் அறிமுகங்களை இடைநிறுத்துவோம்.
இடைநிறுத்துவதா, நீக்குவதா?
இடைநிறுத்தினால் எல்லாம் அப்படியே இருக்கும். உங்கள் கணக்கை நீக்குவது உங்கள் சுயவிவரத்தை அகற்றிவிடும்; அதைத் திரும்பப் பெற முடியாது.