முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்லுங்கள்

ஓர் அறிமுகம் குறித்து முடிவெடுக்க எனக்கு எவ்வளவு நேரம் உண்டு?

அறிமுகம் வந்ததிலிருந்து, அதை ஏற்றுக்கொள்ளவோ தவிர்க்கவோ உங்களுக்கு 48 மணி நேரம் உண்டு. இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என்பதை Home (முகப்பு) திரையிலும் அறிமுகத்திலும் பார்க்கலாம். நீங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை என்றால், நேரம் முடிவதற்கு 12 மணி நேரம் முன் உங்களுக்கு நினைவூட்டுவோம். நீங்கள் இருவரும் முடிவெடுக்கும் வரை அல்லது நேரம் முடியும் வரை, ஒருவரின் பதிலை மற்றவர் பார்க்க முடியாது.

அறிமுகம் திறந்திருக்கும்போது​

  • அவசரப்பட வேண்டாம். அவரது சுயவிவரத்தையும், நீங்கள் ஏன் அறிமுகப்படுத்தப்பட்டீர்கள் என்பதற்கான காரணங்களையும், அவரது பதில்களையும் படியுங்கள்.
  • அறிமுகத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள Accept (ஏற்றுக்கொள்) அல்லது Pass (தவிர்) என்பதைத் தொடுங்கள்.
  • நீங்கள் முதலில் ஏற்றுக்கொண்டால், You said yes (நீங்கள் சம்மதித்தீர்கள்) என்று காண்பீர்கள். அவரும் முடிவெடுக்கும் வரை அவருக்கு இது தெரியாது.

நீங்கள் இருவரும் முடிவெடுத்ததும்​

  • நீங்கள் இருவரும் ஏற்றுக்கொண்டால்: உங்கள் உரையாடல் திறக்கும்; இருவருக்கும் தெரியப்படுத்துவோம்.
  • உங்களில் ஒருவர் தவிர்த்தால்: அறிமுகம் முடிந்துவிடும். யார் தவிர்த்தார் என்று இருவருக்குமே சொல்லப்படாது.

48 மணி நேரம் முடிந்துவிட்டால்​

அறிமுகம் மூடப்படும். அடுத்த 90 நாள்களுக்கு நீங்கள் இருவரும் மீண்டும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தப்பட மாட்டீர்கள்.

  • நீங்கள் முடிவெடுத்திருந்து அவர் முடிவெடுக்கவில்லை என்றால், வழக்கம்போல் அடுத்த சுற்றில் நீங்கள் இடம்பெறுவீர்கள். அறிமுகம் முடிந்துவிட்டதை உங்களுக்குத் தெரியப்படுத்துவோம்.
  • நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், உங்கள் அறிமுகங்களை இடைநிறுத்துவோம். மீண்டும் தொடங்க விரும்பும்போது, Home திரையில் I’m ready (நான் தயார்) என்பதைத் தொடுங்கள். பதிலளிக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு அறிமுகங்கள் அனுப்பப்படுவதை இது தவிர்க்கிறது.

கடைசியாகப் புதுப்பித்தது: